பிலாக் தெரியும் .லிங்க் பிலாக் தெரியுமா?
பிலாக் என்றால் வலைப்பதிவு என்று தெரியும்.அதென்ன லிங்க் பிலாக்?என்று குழப்பமாக இருந்தால் இணைப்பு பதிவு என்று பொருள் கொள்ளுங்கள்.
அதாவது இணைப்புகளுக்கான வலைப்பதிவு.இணையதளங்களுக்கான நம்முடைய குறிப்பேடு என்றூம் சொல்லலாம்.
இணையவாசிகளாக இருந்தால் தினந்தோறும் எத்தனையோஇணையதளங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும்.புதிது புதிதாக பல இணையதளங்களை பார்க்க நேரிடும்.சில இணைதளங்கள் பார்க்கும் போதே வியக்க வைக்கும்.சரி தினமும் பார்க்கலாம் என குறித்து வைத்து கொண்டு அடுத்த தளத்தை பார்க்கச்சென்று விடுவோம்.மறுநாள் மறந்து விடுவோம். பிறகு இன்னொரு நாள் அன்று ஒரு இணையதளம் பார்த்தோம் அதன் முகவரி என நினைத்து நினைத்து பார்ப்போம்.ஆனால் முகவரி மட்டும் சரியாகவே நினைவுக்கு வராது.
இத்தகைய நிலை ஏற்படாமல் புதிய தளத்தை பார்த்தோமா உடனே அதனை குறித்து வைத்தோமா என்று இருந்தால் எப்படி இருக்கும்?அதற்கான வசதியை சுலபமாக ஏற்படுத்தி தரும் இணைய சேவை தான் ஹோவல் என்னும் இணைப்பு பதிவு.
ஹோவல் தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டால் இணையத்தில் உலாவும் போது கண்ணில் படும் நல்ல இணையதளங்களை அப்படியே நம்முடைய பக்கத்தில் இணைப்பாக்கி கொண்டுவிடலாம்.அதன் பிறகு எப்போது தேவையோ அப்போது பார்த்துக்கொள்ளலாம்.
எல்லாம் சரி இதற்கு தான் புக்மார்கிங் தளங்கள் இருக்கின்றனவே என்று நீங்கள் கேட்கலாம்.
ஆம் ஒரு விதத்தில் இதுவும் புக்மார்கிங் தளம் போலதான்.ஆனால் புக மார்கிங் தளம் இல்லை.
இங்கு நாம் தளங்களை இணைப்புகளாக சேமித்து வைக்கிறோம்.அது பதிவிடுவது போல அமைகிறது என்பதே விஷயம்.அதோடு இந்த சேவை பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதானது.தளத்தை சேமித்து வைக்க நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதன் முகவரியை காபி பேஸ்ட் செய்வது மட்டுமே.அதற்காக தலைப்பு கொடுக்க வேண்டியதோ குறிப்பு எழுதவோ அவசியமில்லை.
அதே போல உறுப்பினராக சேர்வதும் மிகமிக எளிமையானது.இது போன்ற டதளங்கள் உறுப்பினராக சேர்வதற்கு முன் ஊரை சொல்லுங்கள் பெயரை சொல்லுங்கள் இமெயிலை சொல்லவும் என அடுக்கடுகாக கேள்விகளை கேடு வெறுப்பேற்றும்.இந்த தளத்தில் அதெல்லாம் தேவையில்லை.இமெயில் முகவரியையும் பாஸ்வேர்டையும் டை செய்தால் போதும் நீங்கள் உறுப்பினராகி விட்டீர்கள்.
பாஸ்வேர்டை கூட திரும்ப டைப் செய்ய சொல்வதில்லை இந்த தளம்.
ஆக பார்த்த மாத்திரத்தில் உறுப்பினராகி இணைப்புகளை பதிவிடலாம்.இவ்வாறு நாம் சேமித்து வைக்கும் இணையதளங்கள் வலைப்பதிவு போல அழகாக அமைகின்றன.
எப்போது தேவையோ அப்போது இவற்றை பார்த்து கொள்ளலாம். இதே போல் மற்றவர்களீன் இணைப்பு பதிவுகளில் உள்ள இணைப்புகளையும் பார்க்க முடியும்.இந்த இணைப்புகளை நண்பர்களோடு சுலபமாக் பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக் அல்லது டிவிட்டர் முகவரியை கொண்டு உறுப்பினராகி இருந்தோம் என்றால் இணைப்புகள் தாமாகவே நண்பர்களோடு பகிரப்பட்டு விடும்.
புகமார்கிங் வசதியையே லிங்க பிலாக் என்று கொஞ்சம் மாற்றி சொல்லியிருந்தாலும் உண்மியிலேயே இணைப்புகளை குறித்து வைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் எளிமையான வழியை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
——–
http://www.howl.com/
No comments:
Post a Comment