tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Tuesday, 15 June 2010

மாற்று தேடியந்திரம்‍


ne1ஒரே ஒரு சின்ன வேறுபாடு பெரிய மாற்றத்தை தரும் என்றால் புதிய தேடியந்திரமான ஒன்ரயாட் தேடல் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரக்கூடும்.
ஒன்ரயாட் தேடல் முடிவுகளை கூகுலைப்போலவே பட்டியலிட்டு தருகிறது. ஆனால் அந்த முடிவுகளை தேடப்படும் சொல்லுக்கு பொருத்தமானதாக இருப்பதோடு, சமகாலத்து நடப்புகளுக்கு ஏற்ப இருக்குமாறும் பார்த்துக்கொள்கிறது.
இது தான் ஒன்ரயாட்டின் சிறப்பமசம். மற்ற தேடியந்திரங்களில் இருந்து தன்னை வேறுபடுத்தும் அம்சம் இதுவே என்கிறது ஒன்ரயாட்.
இந்த அம்சத்தை இண்டெர்நெட்டின் நாடித்துடிப்பை உண்ர்ந்து தேடுவதாக ஒன்ரயாட் தெரிவிக்கிறது. அதாவது இண்டெர்நெட் உலகில் தற்போது பரபப்பாக உள்ள செய்திகளுக்கு முன்னுரிமை அளித்து அதனடிப்படையில் தேடல் முடிவுகள் பட்டியலிடப்படுகிறது.
உதாரணத்திற்கு ஒபாமா பற்றி தேடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.பொதுவாக அவரது வாழ்க்கை குறீப்பு தளம், விக்கிபீடியா தள பக்கம், போன்றவை வருவத‌ற்கு பதிலாக ஒப்பமா தொடர்பான தற்போதைய செய்தியே முதலில் வரும்.
ஆக இங்கு தேடும் போது தற்போது பிரபலமாக இருக்கும் செய்தி சார்ந்த தேடல் அனுபவத்தை இந்த தேடியந்திரம் தருகிறது.
இணையவாசிகளின் பங்களிப்போடு இப்படி உலக நடப்புகளை தெரிந்துகொண்டு முடிவுகள் பட்டியலிடப்படுகின்றன. விரும்பினால் நீங்களூம் இதில் ப‌ங்கேற்கலாம்.
——–
link;
http://www.oneriot.com/

No comments:

Post a Comment