நீங்கள் தீவிர கால்பந்து ரசிகராக இருந்து, உலக கோப்பை போட்டிகளை காண தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தால், கவலையே பட வேண்டாம் தேடியந்திரமான கூகுல் உங்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறது.
ஆம்! கூகுல் மூலம் உலககோப்பை நடைபெற உள்ள மைதானங்களை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் பறவை பார்வையாக எல்லா மைதானங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பார்த்து ரசிக்கலாம். கூகுல் எர்த் இதற்கான வசதியை வழங்குகிறது. தேடியந்திரமான கூகுல் தகவல்களை தேட உதவுவதோடு, அதன் வரைபட சேவையான கூகுல் மேப்ஸ் மற்றும் கூகுல் எர்த் மூலம் உலகை சுற்றிப்பார்க்க வழி செய்வதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.
கூகுல் எர்த் மூலம் உலகில் உள்ள புகழ் பெற்ற இடங்கள் மற்றும் நகரங்களை செயற்கைகோள் படங்களாக குளோசப்பில் பார்க்க முடியும். அதுமட்டுமல்ல முக்கிய நிகழ்வுகளின் போது கூகுல் தனது வரைப்பட சேவையை அதற்கேற்ப பயன்படுத்துவதுண்டு. அந்த வகையில் உலகமே கால்பந்து ஜூரத்திற்கு ஆட்பட்டிருக்கும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள கால்பந்து ஸ்டேடியங்களை கூகுல் எர்த் மூலம் பார்க்க வழி செய்திருக்கிறது. ஸ்டேடியங்களை சுற்றிப்பார்க்க விரும்புகிறவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூகுல் இத்தோடு நின்றுவிடவில்லை. ஒரு சின்ன அறிவிப்பு மூலம் உலக கோப்பை தொடர்பான மிகப்பெரிய சேவையை வழங்கி வருகிறது. கூகுலின் முகப்பு பக்கத்தில் தேடல் கட்டத்திற்கு கீழே, உலக கோப்பையில் உங்கள் அபிமான அணியை பின் தொடருங்கள் எனும் அறிவிப்போடு இந்த வசதி இடம் பெற்றுள்ளது. இதனை கி(ளி)க் செய்து உள்ளே நுழைந்தால் வண்ணமயமான ஸ்கிரீன் ஷாட்களோடு உலககோப்பைக்கான பக்கம் வந்து நிற்கிறது.
உங்களுடைய அபிமான அணியின் வண்ணத்தில் கூகுல் பிரவுசரில் இணைய பக்கத்தை அமைத்துக் கொள்ளலாம். அதன் பிறகு அபிமான அணி தொடர்பான செய்திகளை பிரவுசர் விரிவாக்கத்தின் மூலம் சுலபமாக பெற முடியும். அத்தோடு கூகுல் மேப்ஸ் மூலம் உலக கோப்பையை உங்கள் நண்பர்களோடு எந்த இடத்திலிருந்து சிறப்பாக பார்க்க முடியும் என்பதற்கான வழி காட்டுதலையும் பெறலாம்.
இதை தவிர, உலக கோப்பை தொடர்பான சமீபத்திய தகவல்களை பெறுவதற்கான இணைப்பும் இடம் பெற்றுள்ளது. அதன் கீழ் உலக கோப்பை கால்பந்து சம்மேளனமான பீஃபாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக, கூகுலில் ஒரே கி(ளி)க் மூலம், உலக கோப்பை கால்பந்தை முழுமையாக பின் தொடரலாம். உலக கோப்பை கால்பந்து தொடர்பாக மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல். கூகுலில் தற்போது தேடப்படும் பதங்களில் ஒவ்வொரு 150 பதங்களிலும் உலக கோப்பை என்பது ஒரு பதமாக இருக்கிறதாõம்.
அதாவது, உலகமே உலக கோப்பை மயமாகி இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை உலக கோப்பை மற்றும் கால்பந்து தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபட்டது பெங்களூர் வாசிகள் தானாம். கூகுல் சர்ச் வால்யூம் இன்டக்ஸ் இதனை தெரிவிக்கிறது. இந்த பட்டியலில் தமிழகத்திற்கு 2வ இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் கால்பந்து மாநிலங்களாக கருதப்படும் மேற்கு வங்காளம் மற்றும் கேரளா 5வது இடத்திற்கு கீழ் வருகின்றனவாம்.
No comments:
Post a Comment