பைல் போன் இணைப்பிற்கான எண்களை 11 இலக்க எண்ணாக மாற்றும் திட்டத்தை அரசு சற்று தள்ளிவைத்துள்ளது. சுனாமி வேகத்தில் மொபைல் இணைப்புகள் பெருகி வருவதால், மொபைல் இணைப்பிற்கான எண்களை 11 இலக்கமாக மாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது எனச் சில மாதங்களாக பேசப்பட்டு வந்தது.
2010 ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இது அமலுக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவை முதலில் இதற்கு இன்னும் அவகாசம் தேவை எனக் கேட்டனர். தொடர்ந்து தனியார் நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
ஒரு இலக்கத்தை அதிகரிப்பதால், மிகப் பெரிய அளவில் சேவைக் கட்டமைப்பில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என்றும், இது பல மாதங்கள் எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாற்றம் அவசரத்தில் அமல் செய்யப்பட்டால், நாட்டின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிடும் என்று அரசு கருதுகிறது. எனவே தான் இந்த திட்டத்தினை அரசு தள்ளி வைத்துள்ளது.
இதற்குப் பதிலாக இந்திய செல்லுலர் அசோசியேஷன் இன்னொரு மாற்று வழியை முன் மொழிந்துள்ளது. அதன்படி எண்கள் 10 இலக்கம் கொண்டவையாகவே இருக்கும். ஆனால் முதல் இலக்கம் இப்போது 9 ஆக மட்டுமே இருப்பதனை 7 மற்றும் 8 ஆகவும் வைத்துக் கொள்ளும் முறையை ஆய்வு செய்திடக் கேட்டுள்ளது.
இதன் மூலம் மேலும் 200 கோடி இணைப்புகளைத் தர முடியும். அடுத்த ஏழு அல்லது பத்து ஆண்டுகளுக்கு எண் பிரச்னையே வராது என்றும் அறிவித்துள்ளது.
தற்போது உள்ள 9ல் தொடங்கும் 10 இலக்க எண் திட்டம் 2003 ஆம் ஆண்டில் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. 2030 வரை இதில் பிரச்னை இருக்காது என்று அரசு அப்போது எண்ணியது. ஏனென்றால் அப்போதைய எதிர்பார்ப்பின்படி 50 கோடி இணைப்பு என்ற இலக்கு 2030ல் தான் எட்டப்படும் என அரசு எண்ணியது.
ஆனால் 21 ஆண்டுகளுக்கு முன்பாகவே, 2009லேயே இந்த எண்ணிக்கையை மொபைல் சேவை இணைப்பு அடைந்ததால் தற்போது பிரச்னை எழுந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக சீனாவையும் மிஞ்சும் வகையில் இந்தியாவில் மொபைல் போன் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 13 நிறுவனங்கள் சேவை வழங்கும் பிரிவில் போட்டியிடுகின்றன. மேலும் நான்கு நிறுவனங்கள் வரும் ஆண்டில் தங்கள் சேவையைத் தொடங்க இருக்கின்றன
No comments:
Post a Comment