tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Monday, 28 June 2010

புதிய ஆடையோடு போஸ்

புதிய ஆடையை அணிந்து கொண்டவுடன் கண்ணாடி முன் நின்று அழகு பார்க்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது சொல்லுங்கள்?அது மட்டுமா புதிய ஆடையை அணிந்து கொண்ட பிறகு நெருக்கமானவர்களிடம் இந்த உடை எப்படி  இருக்கிறது என்று கருத்து கேட்கவும் ஆர்வம் இருக்கும் அல்லவா?
மனதார செல்கின்றனரோ ஒப்புக்கு சொல்கின்றனரோ அணிந்திருக்கும் ஆடை பற்றி நண்பர்களும் தெரிந்தவர்களும் பாராட்டி டொல்வதை கேட்டால் உற்சாகமாகதான் இருக்கும்.
இண்டெர்நெட் யுக‌த்தில் இந்த புத்தாடை அணிந்தவுடன் நல்லாயிருக்கா என்று கேட்கும் பழக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல ஒரு அழகான இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது தெரியுமா?இந்த தளத்தின் மூலம் புதிய ஆடை பற்றி உலகம் முழுவதும் கருத்து கேட்கலாம் என்பது தான் இன்னும் சுவாரஸ்யமான விஷயம்.
பார்க்க‌லாம்;ப‌கிர‌லாம் என்று சொல்வ‌து போல‌ இஸ்விய‌ரிங் என்னும் இந்த‌ த‌ள‌த்தின் மூல‌ம் நீங்க‌ள் புதிய‌ ஆடையில் போஸ் த‌ர‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ள் போஸ்க‌ளை பார்க்க‌லாம்.
ஆடை பிரிய‌ர்க‌ளுக்கான‌ இணைய‌த‌ள‌ம் என்றும் இத‌னை சொல்ல‌லாம்.அதைவிட‌ ஆடைக‌ள் மூல‌ம் த‌ங்க‌ளை வெளிப்ப‌டுத்திக்கொள்ள‌ விரும்புகிற‌வ‌ர்க‌ளுக்கான‌ த‌ள‌ம் என்றும் சொல்ல‌லாம்.
இன்று நீங்க‌ள் அணிந்திருக்கும் ஆடை என்ன? என்று கேட்கும் இந்த‌ த‌ள‌த்தில் அத‌ற்கு ப‌தில் அளிக்கும் வ‌கையில் புத்தாடை அணிந்த‌ப‌டி போஸ் கொடுக்கும் உங்க‌ள் புகைப்ப‌ட‌த்தை ச‌ம‌ர்பிக்க‌லாம்.
இத‌ற்காக‌ நீங்க‌ள் செய்ய‌ வேண்டிய‌தெல்லாம் புதிய‌ உடையில் ஒரு புகைப்ப‌ட‌ம் எடுத்துக்கொண்டு அத‌னை இங்கு ச‌ம‌ர்பித்தால் போது. உடைக்கான‌ அறிமுக‌ குறிப்பை ஒரிரு வார்த்தைக‌ளீல் குறிப்பிட்டு அவ‌ற்றை எங்கே வாங்கினீர்க‌ள் என்றும் தெரிவிக்க‌லாம்.
இந்த‌ புகைப்ப‌ட‌த்தை டிவிட்ட‌ர் ,பேஸ்புக் ,இமெயில் மூல‌ம் நண்ப‌ர்க‌ளுக்கு அனுப்பி வைக்க‌ முடியும்.ச‌க‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ உடையை பார்த்து விட்டு க‌ருத்து தெரிவிக்க‌வும் வ‌ச‌தி உண்டு.
நீங்களும் இப்ப‌டி ம‌ற்ற‌ உறுப்பின‌ர்க‌ளின் உடைக‌ளை பார்க்க‌லாம்,ர‌சிக்க‌லாம்,க‌மென்ட் அடிக்க‌லாம்.அப்ப‌டியே புதிய‌ டிசைனில் என்ன‌ என்ன‌ ஆடைக‌ள் அறிமுக‌மாகியிருக்கின்றான‌ என்றும் தெரிந்து கொள்ள‌லாம்.கூட‌வே அவை எங்கே வாங்க‌ப்ப‌ட்டன‌ என்ப‌தையும் அறிந்து கொள்ள‌லாம்.
ப‌ஸ்சிலோ ரெயிலிலோ லேட்ட்ஸ்ட் டிசைனில் உடுத்திச்செல்ப‌வ‌ர்க‌ளை பார்க்கும் போது சில‌ருக்கு அந்த‌ ஆடை எங்கே கிடைக்கும் என‌ தெரிந்து கொள்ளும் ஆர்வ‌ம் உண்டாகும் அல்ல‌வா?ஆனாலும் முன்பின் தெரியாத‌வ‌ர்களிட‌ம் எப்ப‌டி பேசுவ‌து என்ற‌ த‌ய‌க்க‌மும் ஏற்ப‌ட‌லாம்.
இந்த‌ த‌ள‌மோ அத்த‌கைய‌ ப‌ட‌ப‌ட‌ப்போ த‌ய‌க்க‌மோ இல்லாம‌ல் புதிய‌ ஆடைக‌ள் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ சுல‌ப‌மாக‌ வ‌ழி செய்கிற‌து.
இந்த‌ த‌ள‌த்தில் உள்ள‌ கூடுத‌ல் வ‌ச‌தி புகைப்ப‌ட‌த்தில் பார்ப்ப‌து போன்ற‌ ஆடைக‌ளை எங்கெல்லாம் வாங்க‌ முடியும் என‌ தெரிந்து கொண்டு ஆன்லைனிலேயே ஆர்ட‌ர் செய்யலாம் என்ப‌தே.
அணியும் ஆடைக‌ள் உங்க‌ள் ஆளூமையை அடையாள‌ம் என‌வே அவ‌ற்றை வெளீப்ப‌டுத்துவ‌து வெறும் சுவார‌ஸ்ய‌ம் ம‌ட்டும‌ல்ல‌ அது உங்க‌ளைப்ப‌ற்றிய‌ உள்ளொளியையும் வெளிப்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து என‌ தெரிவிக்கும் இந்த த‌ள‌ம் எத‌னையும் ப‌திவு செய்வ‌தே அத‌னை மேம்ப‌டுத்திகொள்வ‌த‌ற்கான‌ வ‌ழி என்று சொல்லி புகைப்ப‌ட‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌ ஊக்குவிக்கிற‌து.
பேஷ‌ன் மூல‌ம் மற்ற‌வ்ர்க‌ளோடு பேசி தொட‌ர்பு கொள்ள‌லாம் என்றும் சொல்லும் இந்த‌ த‌ள‌ம் புதிய‌ ஆடைக‌ளை க‌ண்டுகொள்ளுங்க‌ள் என்றும் உற்சாக‌ம் அளீக்கிற‌து.கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் நட்பை தேடிக்கொள்ளவும் எத்தனையோ தளங்கள் இருக்கின்றன.ஆனால் ஆடைகள் மூலம் மட்டுமே நம்மை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் இந்த தளம் கொஞ்ச்ம சுவாரஸ்யமானது தான்.
இதில் இட‌ம்பெற்றுள்ள‌வ‌ர்க‌ளின் உற்சாக‌மான‌ போஸ்க‌ளையும் முக‌த்தில் பொங்கும் புன்ன்கையையும் பார்த்தால் ந‌ம‌க்கும் உற்சாக‌ம் தொற்றிக்கொள்கிற‌து.ஆனால் எல்லோருமே மேல்நாட்டு ஆடை அணிந்து தான் காட்சி தருகின்ற‌ன‌ர்.அமெரிக்காவை மைய‌மாக‌ கொண்ட‌ த‌ள‌ம் என்ப‌தால் இப்ப‌டி இருக்க‌லாம்.
ந‌ம்ம‌வ‌ர்க‌ளும் ர‌ங்க‌நாத‌ன் தெருவுக்கு போன‌ கையோடு கேமிராவில் ஒரு கிளிக் செய்து இந்த‌ த‌ள‌த்தில் அத்னை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.புதிய‌ சேலை ம‌ற்றும் புத்த‌ம் புதிய‌ சுடிதார் ர‌க‌ங்க‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌ இதைவிட‌ சிற்ந்த‌ வ‌ழி ஏது?
——–
http://iswearing.com/

No comments:

Post a Comment