tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Sunday, 13 June 2010

பாதுகாப்பான கூகுள் தேடல்

சர்ச் இஞ்சின் என்றாலே, அதிகமானோர் பயன்படுத்தும் தேடல் சாதனமாக கூகுள் இயங்கி வருகிறது. எனவே தான் கூகுள் நிறுவனமும் இதில் கூடுமானவரை விரைவான, பாதுகாப்பான தேடல் அனுபவத்தினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
பாதுகாப்பினைத் தருவதில், அண்மையில், கூகுள் இன்னொரு அம்சத்தினை வழங்கியது. வழக்கமான கூகுள் தேடல் தளத்துடன், இன்னொரு பாதுகாப்பான தளத்தினை கூகுள் கொண்டு வந்துள்ளது. இதன் முகவரி https://www.google.com/. இது பாதுகாப்பான தளம் என்பது இதில் உள்ள https என்னும் முகவரிச் சொல்லைக் கொண்டு அறியலாம். இந்த தளத்தின் மூலம் தேடுகையில், தேடுதலை மேற்கொள்ளும் கம்ப்யூட்டருக்கும், கூகுள் சர்ச் தளத்திற்கும் இடையேயான தேடல் விபரங்கள் மாற்றிச் சுருக்கப்பட்டு (encryption) அனுப்பப்படுகின்றன. இதனால் இன்டநெட் சர்வீஸ் தரும் நிறுவனங்கள் போல உள்ளவற்றிற்கு, இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாது. குறிப்பாக பொது இன்டர்நெட் மையங்களில் தேடுதலை மேற்கொள்பவர்கள், இந்த பாதுகாப்பான கூகுள் தேடல் தளம் (https://www.google.c.) மூலம் தங்கள் தேடல்களை மேற்கொள்ளலாம். இதன் மூலம் கூடுதல் om/பாதுகாப்பு கிடைக்கிறது. வழக்கமான தளத்திற்கும், இந்த பாதுகாப்பு தரும் தளத்திற்கும் ஒரு எழுத்து தான் வேறுபாடுhttp யுடன் s சேர்க்க வேண்டும். அல்லது இதற்கான யூசர் ஸ்கிரிப்ட்டை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். டவுண்லோட் செய்திட http://userscripts.org/ scripts/show/5951 என்னும் முகவரிக்குச் செல்லவும். இன்னும் எளிய வழி, இந்த தளம் சென்று பின் அதனை ஒரு புக்மார்க்காக அமைத்து இயக்குவதுதான்.

No comments:

Post a Comment