உலக கோப்பையில் இன்று நடந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ அணிகளுக்கிடையேயான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. தென் ஆப்பிரிக்க வீரர் எம்பேலா தனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புகளை வீணடித்ததால் தென்ஆப்பிரிக்கா வெற்றியை இழந்தது.
உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது.ஜோகன்ஸ்பர்க் சாக்கர்சிட்டி மைதானத்தில் 'ஏ' பிரிவில் நடந்த முதல் போட்டியில் தரவரிசையில் 83வது இடத்தில் உள்ள தென்ஆப்பிரிக்கா 17வது இடத்தில் உள்ள மெக்சிகோ அணியை எதிர் கொண்டது.போட்டியை காண 84 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டிருந்தனர்.தென் ஆப்பிரிக்க உள்ளுர் அணி என்பதால் அவர்களுக்கு ஆதரவு பலமாக இருந்தது.முதல் பாதியில் அனுபவமிக்க மெக்சிகோ வீரர்களிடம் தென்ஆப்பிரிக்க வீரர்களின் ஆட்டம் எடுபடவில்லை.மெக்சிகோ வீரர்கள் பல கோல் வாய்ப்புகளை உருவாக்கினாலும் முதல் பாதியில் பலன் கிடைக்கவில்லை.
ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் மெக்சிகோ ஒரு கோல் அடித்தது. வேலா அடித்த இந்த கோலை 'லைன்ஸ்மேன்' 'ஆப்சைடு' என்று அறிவித்தார்.தென் ஆப்பிரிக்க கோல்கீப்பர் குனே பந்தை கைப்பற்ற சற்று முன்னால் செல்ல கோல் லைனில் ஒரே ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் மட்டுமே இருந்தார்.இதனால் இந்த கோல் 'ஆப்சைடு' ஆனது. லைன்ஸ்மேன் துல்லியமாக செயல்பட்டு இதனை 'ஆப்சைடு' கோல் என்று அறிவித்தார்.முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பிற்பாதியில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் ஆவேசமாக விளையாடினார்கள். இதற்கு 55வது நிமிடத்தில் பலன் கிடைத்தது.தென் ஆப்பிரிக்க வீரர் சபலாலா தனது இடது காலால் மிக நேர்த்தியாக ஒரு கோல் அடித்து முன்னிலை தேடிக் கொடுத்தார்.தென்ஆப்பிரிக்காஅணிக்காக சபேலாலா விளையாடும் 50வது சர்வதேச போட்டி இதுவாகும்.இதில் கோல் அடித்தது அவரது சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது. சபலாலாவின் கோல் முலம் தென்ஆப்பிரிக்கா 1-0 என்று முன்னிலை பெற்றது.ஆனால் மீண்டும் மீண்டும் தென்ஆப்பிரிக்க வீரர்கள் மெக்சிகோ கோல்கம்பத்தை முற்றுகையிட்டனர். 65 மற்றும் 69வது நிமிடங்களில் தென் ஆப்பிரிக்க வீரர் எம்பேலாவுக்கு இரு 'ஒபன் நெட்' வாய்ப்புகள் கிடைத்தன. இரு வாய்ப்புகளையும் அவர் கோலாக மாற்ற தவறினார்.
பிற்பாதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவின் தடுப்பாட்டத்தில் ஏற்பட்ட தொய்வை பயன்டுத்தி மெக்சிகோ ஒரு கோல் அடித்தது.79வது நிமிடத்தில் மார்கஸ் அடித்த கோலால் சாக்கர்சிட்டியில் மயான அமைதி நிலவியது.மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தென்ஆப்பிரிக்க மக்களும் ஏமாற்றமடைந்தனர்.இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.கடைசி நேரத்தில் 89வது நிமிடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் எம்பேலாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அவரது துரதிருஷ்டம் பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது.இறுதியில் 1-1 என்று போட்டி 'டிரா' ஆனது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment