அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில், உலகின் பெரிய நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இதற்கிடையில், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பு நடத்திய தேசியளவிலான சர்வே வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆய்வு தகவல்: உலகளவில் பெரிய கோடீஸ்வரராக இருப்பவர் பில்கேட்ஸ். இவரை போன்று, அடுத்து உருவாகும் உலகளவில் பெரிய கோடீஸ்வரர், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருப்பார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமெரிக்கர்களில் 40 சதவீதத்தினர், இந்தியா அல்லது சீன நாட்டில் இருந்து தான், அடுத்த பில்கேட்ஸ் உருவாவார் என தெரிவித்து உள்ளனர். சர்வதேச அளவில், அமெரிக்கா சரிவைச் சந்தித்துள்ளது.
ஆனால் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள், வளர்ச்சியடையத் துவங்கி உள்ளன. கேள்விக்கு பதிலளித்த அமெரிக்கர்களில் 74 சதவீதத்தினர், அடுத்தாண்டு, அமெரிக்கா உலகளவிலான போட்டியில், தன் நிலையை தொடர்ந்து பராமரிக்கும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதில், பதிலளித்தவர்களில், 68 சதவீதத்தினர் புதிய முறைகளே எதிர்கால வேலை வாய்ப்பு மற்றும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் என்று நம்புகின்றனர். அமெரிக்காவில் நிலவும் பொருளதார பற்றாக்குறை, வருங்கால சந்ததியினரின் வளத்தை பாதிக்கும் என, 60 சதவீதத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டது
No comments:
Post a Comment