காவல் துறையினர் உங்களூக்கு தவறாக அபாராதம் வித்தித்திருப்பதாக தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?
கோபம் கொள்வீர்கள்.புலம்புவீர்கள்.முறையீடு செய்யவும் முற்படலாம்.
ஆனால் இணைய பழி வாங்கிலில் ஈடுபட்டு பாடம் புகட்ட முயல்வீர்களா?
அமெரிக்கவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இப்படி தான் தனக்கு தவறுதலாக அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையை பழி வாங்கி பாடமும் புகட்டியுள்ளார்.அவரது செயல் இணையவாசிகளின் சுறுசுறுப்புக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளீன் இணைய சோம்பலுக்கும் அடையாளமாக விளங்குகிறது.அதோடு இண்டெர்நெட் சார்ந்த சுவார்ஸ்யமாக கதையாகவும் அமைந்துள்ளது.
பிரயன் மெக்கிராரே என்பது அவரது பெயர். டெனிஸி நகரைச்சேர்ந்தவர்.பெரும்பாலான அமெரிக்கர்களைப்போல அவரும் கார் வைத்திருக்கிறார்.கார் வைத்திருக்கும் பல அமெரிக்கர்களூக்கு ஏற்படும் அனுபவம் சமீபத்தில் அவருக்கும் உண்டானது.அவருக்கு அதி வேகமாக கார் ஓட்டிச்சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டது.
அபாராத சீட்டை பார்த்ததும் வெறுத்துப்போனார்.பிலப் சிட்டி என்னும் இடத்தில் அவர் அதிக வேகத்தில் கார் ஓட்டிச்சென்றதாக அபாரதம் விதிக்கப்பட்டிருந்தது.அங்கிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
தான் சரியாகவே கார் ஓட்டி சென்றதாக நம்பிய மெக்கிராரே தவறாக பராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஆவேசமடைந்தார்.இது குறித்து புகார் செய்ய விரும்பினார். நேரில் செல்வதைவிட இண்டெர்நெட் மூலம் புகார் அளிக்கலாம் என நினைத்து சம்பந்தப்பட்ட பிலப் சிட்டி காவல் துறை இணையதளத்திற்கு சென்று பார்த்தார்.
அங்கே அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.அதிர்ச்சி என்றும் சொல்லலாம்.ஏமாற்றம் என்றும் சொல்லலாம்.காரணம் அந்த இணையதளத்தில் தகவல்கள் இடம்பெறுவதற்கு பதிலாக ஒரே ஒரு அறிவிப்பு மட்டும் இருந்தது.அந்த அறிவிப்பு இணைய முகவரி புதுப்பிக்கப்படாததால் விரைவில் முகவரியின் உரிமையை இழக்க நேரிடும் என்று எச்சரித்து கொண்டிருந்தது.
இணைய முகவரிகளை உரிய காலத்தில் புதுப்பிக்க வேண்டும்.இல்லையென்றால் அதன் உரிமையை இழக்க நேரிடும்.பொதுவாக இப்படி காலாவதியாவதற்கு முன் இமெயில் மூலம் நினைவூட்டப்படும்.அப்படியும் விழ்த்துகொள்ளாவிட்டால் இப்படி தளத்தில் எச்சரிக்கை அறிவிப்பு இடம்பெறும்.அதன் பிறகும் தூங்கினால் இணைய முகவரியை வேறு யாருக்காவது விறப்னை செய்து விடுவார்கள்.
இண்டெர்நெட்டில் வாடிக்கையாக பின்பற்றப்படும் நடவடிக்கை இது.
பிலப்சிட்டி காவல்துறையும் தனது முகவரியை புதுபிக்க தவறியதால் இவ்வாறு எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை பார்த்த மெக்கிராரே இது என்னடா வம்பாக போச்சே என நினைத்தார். புகார் செய்ய வந்தால் அதற்கு வழியில்லாமல் தளம் இப்படி முடங்கி கிடக்கிறதே என வருத்தப்பட்டார்.
இது போன்ற நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள் யோசித்துப்பருங்கள்? எல்லாம் போதாத நேரம் என்று நொந்து கொள்ளலாம். காவல் துறையின் அலட்சியத்தை நினைத்து மேலும் கோபம் கொள்ளலாம்.
மெக்கிராரே இதற்கு மேலும் ஒன்றை செய்தார்.இண்டெர்நெட் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் அவருக்கு காலாவதியாகும் இணைய முகவரிகளை யார் வேண்டுமானாலும் வாங்காலாம் என்பது தெரியும்.எனவே அந்த முகவரியை தானே வாங்குவது என தீர்மானித்தார்.
அது விற்பனைக்கு வரும் வரை காத்திருந்தார்.அதற்குள் முகவரி புதுப்பிக்கப்பட்டு விடக்கூடாதே என படபடப்போடு காத்திருந்தார். ஆனால் ஒரு வார காலம் ஆகியும் முகவரி புதுப்பிக்கப்படவில்லை. இதனையடுத்து முகவரியை நிர்வகிக்கும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு முகவரியை தனக்கு சொந்தமாக்கி கொண்டார்.
காவல்துறையின் இணைய முகவரி அவருக்கு எதற்கு?
அவரிடம் அழகான ஒரு திட்டம் இருந்தது.புகாரில் தான் தெரிவிக்க இருந்ததை இணையதளத்தின் மூலம் பதிவு செய்ய விரும்பினார்.அதன் படியே காவல்துறை முகவரி கொண்ட தளத்தில் தனது எண்ணங்களை இடம் பெற வைத்தார்.கண்காணிப்பு காமிரா என்னும் காவல்துறையின் பொறி வைத்து பிடிக்கும் தவறான செய்லபாட்டை அம்பலப்படுத்துவதற்காக இந்த தளத்தை அமைத்துள்ளதாக தெரிவித்திருந்த அவர் தனனைப்போலவே கண்காணிப்பு காமிராவில் சிக்கி அபாராதம் செலுத்த நேர்ந்தவர்களின் கதை மற்றும் இது தொடர்பான செய்திகளை பட்டியலிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்ட மற்றவர்களின் அனுபங்களையும் பகிர்ந்து கொள்ள வழி செய்திருந்தார்.
யோசித்துப்பருங்கள் எத்தனை அருமையான் செயல் இது.காவல்துறையின் தவறுகளை அதன் இணைய முகவரியை கொண்டே சுட்டிக்காட்டுவது நெத்தியடிதானே.
காவல்துறையி இணையதளத்திற்கு வருகை தந்தவர்கள் இந்த செய்தியை பார்த்து லேசான திகைப்போடு வாலிபரின் புத்திசாலித்தனத்தை பாராட்டவும் செய்தனர்.பலர் சரியான முறையில் பாடம் புகட்டப்பட்டிருப்பதாக வாழ்த்து தெரிவித்தனர்.
பத்திரிக்கைகளில் செய்தி வெளியான பிறகே சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு இது குறித்து தெரிய வந்தது.இணைய முகவரி புதுப்பிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாதே என்று அதிகாரிகள் இது குறித்து கருத்து கேட்கப்பட்ட போது கூறினாராம். இது எப்படி இருக்கு?
No comments:
Post a Comment