பைல் வீடியோவை இணையத்தில் நேரடி ஒளிபரப்ப
சுற்றுலா, பிறந்தநாள், விழாக்கள் போன்றவற்றிற்கு செல்லும்போது அந்த நிகழ்ச்சியை மொபைலில் பதிவு செய்து உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து வந்திருப்போம். மிக வேகமான பகிர்தலுக்கு இணையம் நல்ல ஊடகமாகவே நமக்கு பயன்பட்டு இருக்கிறது.
மொபைலில் எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை உடனுக்குடன் இணையத்தில் ஏற்றுவது பற்றி ஏற்கனவே இடுகைகள் எழுதி இருந்தேன். மொபைலில் எடுக்கும் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புவது எப்படி? என்று இப்போது பார்ப்போம்.
இது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இதற்கு தேவை கேமரா வசதி உள்ள மொபைல் உள்ள போன், மொபைலில் நல்ல வேகமான (3G or Wifi) இணைய இணைப்பு. இதனை சிறப்பாக செய்வதற்கு இணையத்தில் Qik எனும் இணையதளம் சிறப்பான சேவை வழங்குகிறது.
Qik.com சென்று பயனர் கணக்கு உருவாக்கி கொள்ளுங்கள். நீங்கள் பேஸ்புக், டிவிட்டர் பயனராக இருந்தால் அதனை உபயோகித்து Qik -ல் பயனராகி கொள்ள முடியும். அடுத்து அவர்கள் வழங்கும் சிறிய மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ள வேண்டும். எந்தெந்த மொபைல் மாடல்கள் சப்போர்ட் செய்யபடுகிறது என்பதனை இந்த சுட்டியில் காணவும். உங்கள் மொபைல் அந்த பட்டியலில் இருந்தால் மென்பொருளை தரவிறக்கி உங்கள் மொபைலில் நிறுவி கொள்ளுங்கள்.
இந்த மென்பொருளை உபயோகித்து நீங்கள் எடுக்கும் மொபைல் வீடியோக்களை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்புங்கள். வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு Qik இணையதளத்தில் ஒளிபரப்பப்படும், சேமிக்கப்படும். உங்கள் ஒளிபரப்பு அனைவரும் பார்க்கும்வண்ணம் பப்ளிக் ஆக அமைந்து இருக்கும். அதனை நீங்கள் அனுமதிப்பவர்கள் மட்டும் பார்க்கும்படி பிரைவேட் ஆக அமைத்து கொள்ளும் வசதியும் உண்டு.
Qik -ல் சேமிக்கப்படும் உங்கள் வீடியோக்களை நீங்கள் பேஸ்புக், ட்விட்டர், யுடியூப் போன்ற சமூக தளங்களில் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பிளாக்குகளில் Embed செய்தும் கொள்ளலாம். Qik பயனர்களின் நேரடி ஒளிபரப்பு வீடியோக்களையும், சேமிக்க பட்டவற்றையும் இந்த சுட்டியில் காணுங்கள். மொபைல் உபயோகிப்பாளர்கள் இடையே இந்த இணைய சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment